தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமகா சன்னிதானத்தின் குருபூஜை



பகிர்க copied

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 25வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் ஆண்டு குருபூஜை விழா இன்று நடந்தது. அதனை முன்னிட்டு ஆனந்த பரவச பூங்காவில் உள்ள கயிலை குருமணிகள் குருமூர்த்தத்திற்கு தருமபுரம் ஆதீன வேத பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்கள் ஓத. தேவார பாடசாலை மாணவர்கள் பதிகங்கள் பாட, மங்கள வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் குருமூர்த்த கோவிலில் எழுந்தருளி குருமூர்த்ததிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து குருமூர்த்தத்தில் திருமுறை பாராயணம், சொற்பொழிவுகள் நடந்தன. ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்