துபாயில் சர்வதேச அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை!



பகிர்க copied

துபாயில் இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் FOI Events இணைந்து, சர்வதேச அளவிலான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தின. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரக அரசுப் பிரதிநிதிகள் மற்றும் இந்தியச் சமூகத்தினர் பங்கேற்றனர். ஒளித் திருநாளான தீபாவளியை கலாசாரப் பரிமாற்றம் மற்றும் நட்புறவைப் பறைசாற்றும் வகையில் ஒன்றிணைந்து கொண்டாடினர்.


முதன்முறையாகப் பல நாடுகள் பங்கேற்பு: துபாயில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகள் பங்கேற்ற இத்தகைய சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை, இந்தோனேசியா, நேபாளம், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது பாரம்பரிய தீபாவளி வழக்கங்கள் மற்றும் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு அரங்குகளை அமைத்திருந்தன. இந்நிகழ்ச்சி பல்வேறு நாடுகளின் கலாசார ஒற்றுமையையும் நட்புறவையும் வெளிப்படுத்தியது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்