சிங்ககாட் கோட்டையில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதி மகாசுவாமிகள்



பகிர்க copied

புனே: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள், புனே அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்ககாட் கோட்டைக்குச் சென்றார். அப்போது, சத்குரு சமர்த்த ராமதாஸ் சுவாமிகளால் போற்றப்பட்ட “சிவராயாஞ்சே ஆடவாவே ரூப்...” என்ற புகழ்பெற்ற பாடல் பக்தியுடன் இசைக்கப்பட்டது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜரின் வீரம், தியாகம் மற்றும் உயரிய கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள சிங்ககாட் கோட்டை, சிவாஜி மகாராஜர் மற்றும் வீரத் தளபதி தானாஜி மாலுசரே ஆகியோரின் வீர வரலாற்றையும் மராட்டியர்களின் பெருமையையும் இன்றளவும் பறைசாற்றி வருகிறது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்