வவ்வால்கள், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட்டம்



பகிர்க copied

கருமத்தம்பட்டி: பட்டாசு வெடிக்காமல், புத்தாடை, இனிப்போடு மட்டும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் கிட்டாம்பாளையம் கிராம மக்கள். தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது தான் வழக்கம். ஆனால், கருமத்தம்பட்டி அடுத்து உள்ள கிட்டாம்பாளையம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர்.


ஊரின் மையப்பகுதியில் உள்ள மரங்களில், நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருவதுதான் பட்டாசு வெடிக்காததற்கு காரணம் என்கின்றனர் அவர்கள். ‘‘வெடிச்சத்தத்தால் சிட்டுக்குருவிகள், காகம், புறா உள்ளிட்ட பறவைகள் மற்றும் வவ்வால்களின் வாழ்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக பட்டாசு வெடிப்பதை தவிர்க்கிறோம். பட்டாசு வெடித்து யாருக்கும் வரவேற்பு கூட அளிப்பதில்லை. கோயில் திருவிழா, திருமணம், இறுதியாத்திரையின் போது கூட பட்டாசு வெடிப்பதில்லை’’ என்று வேறு சிலர் கூறினர். முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரசேகர் நமது நிருபரிடம், ‘‘ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், தனியார் பங்களிப்பில் இதுவரை, 6,000 மரக்கன்றுகளை நட்டு, பல இடங்களில் சிறு வனங்களை உருவாக்கி உள்ளோம். இதன்மூலம், பறவையினங்களின் பெரிய வாழ்விடமாக கிட்டாம்பாளையம் உருவாகும். கிராம மக்களும் ஒத்துழைக்கின்றனர்’’ என்றார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்