ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜை ஆலோசனை



பகிர்க copied

வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில், மண்டல பூஜை திருவிழா குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், 40ம் ஆண்டு மண்டல

பூஜை திருவிழா இந்த மாதம் இறுதியில் நடக்கிறது.

வரும், 20ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடக்கும் விழா குறித்த ஆலோசனைக்கூட்டம், அகில பாரத ஐயப்ப சேவா சங்க தலைவர்

மூர்த்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், இந்த ஆண்டும் வழக்கம் போல் விழாவை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்க செயலாளர் சந்திரசேகர்,

பொருளாளர் அழகர்சாமி, ஆலோசகர் வக்கீல் பால்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்