நந்தி வாகனத்தில் மேல் ஏறி திருவண்ணாமலை கோபுரத்தை சுத்தம் செய்தால் சர்ச்சை



பகிர்க copied

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கோபுரத்தை சுத்தம் செய்ய, இறைவன் திருவீதியுலா வர பயன்படுத்தப்படும், நந்தி வாகனத்தை, தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தியதற்கு, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தீயணைப்பு வாகனம், ஏணி போன்றவற்றை பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வோடும், வழிபாட்டு மரபுகளோடும் தொடர்புடைய, சிவபெருமானின் நந்தி வாகனத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கோபுரத்தை சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசு துறைகளின் அலட்சியத்திற்கும், நிர்வாக வசதிக்கும், பக்தர்களின் இறை நம்பிக்கையை பலிகொடுப்பது நியாயமா. இந்த சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகம், பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் கோவில் வாகனங்கள், ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாக பயன்படுத்தப்படாது. கோவில்களின் புனிதத்தை பாதுகாப்போம் என, அறநிலையத்துறை உறுதியளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்