ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்



பகிர்க copied

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் இன்று காலை 8 மணி அளவில் ஞானாம்பிகை அம்மன் சமேத ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் வீரவாகு தேவர்களுக்கு திருகாப்பு அணியும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஆறுமுகசாமிகளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது. மாலை வீரவாக தேவர்கள் வீதியுலா மற்றும் கந்தபுராணம் வாசிப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இரவு உற்சவமூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கந்த சஷ்டி உபவாசம் நிகழ்ச்சியும் சூரசம்ஹாரமும் மறுநாள் திங்கள் அன்று சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்