மொரட்டாண்டியில் சிவசுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி மகாயாகம்



பகிர்க copied

புதுச்சேரி: மொரட்டாண்டியில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிதம்பர சண்முக சிவசுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி மகாயாகம்  நடந்தது.


புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர வள்ளி, தேவசேனா சமேத சிதம்பர சண்முக சிவசுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி மகாயாகம், அபிஷேக மகா தீபாராதனை நேற்று நடந்தது. தொடர்ந்து, 108 லிட்டர் பால் அபிஷேகமும், விசேஷ அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சிதம்பர கீதா ராமசிவாச்சார்யார் செய்திருந்தார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்