வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசை



பகிர்க copied

சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


சென்னை வடபழனி முருகப்பெருமான் கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த 9ம் தேதி வரசித்தி விநாயகர் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, 10ம் தேதி மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று, மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கிய லட்சார்ச்சனை, உச்சிகால பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவமும், இரவு 8:35 மணிக்கு சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் வருகையையொட்டி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியிலும், கூட்ட நெரிசலை முறைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்