ராமானுஜரின் பிற பெயர்கள் | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ராமானுஜரின் பிற பெயர்கள்

ஏப்ரல் 25,2017



1. இளையாழ்வார்- குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம்
2. ராமானுஜர்- ஸ்வாமியின் மாமா பெரிய திருமலை நம்பியால் குழந்தைக்கு இடப்பட்ட திருநாமம் (பெரிய நம்பிகளால் பஞ்ச சமஸ்காரம் செய்தருளியபோது, சாற்றப்பட்ட திருநாமம் என்றும் கூறப்படுகிறது.)
3. யதிராஜர்- பெரிய நம்பிகளால், சதுர்த்தாஸ்ரம ஸ்வீகாரத்தின்போது சாற்றப்பட்ட திருநாமம்.
4. உடையவர்- அரங்கன், ராமானுஜருக்கு உபயவிபூதி பட்டம் அளித்து அருளிய திருநாமம்.
5. லக்ஷ்மணமுநி- திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமொழி, திருவாய் மொழி (மூலம்) சந்தை செய்தருளி மஞ்சள் காப்பு கைங்கர்யத்திற்கு உள்ளம் மகிழ்ந்து வைத்த திருநாமம்.
6. எம்பெருமானார்- திருக்கோட்டியூர் நம்பியால், ராமானுஜரின் பெரும் கருணை உள்ளத்தைக் கண்டு உகந்து இட்ட திருநாமம்.
7. சடகோபன் பொன்னடி- திருமலையாண்டான் பெரிய திருமொழி, திருவாய்மொழி முதலியவற்றிற்கு அர்த்தங்களை கற்றுத் தந்த பின் அளித்த திருநாமம்.
8. கோயிலண்ணன்- ஆண்டாள் விருப்பப்படி திருமாலிருஞ்சோலை அழகர் உகக்கும்படி,  நூறு தடாவில் வெண்ணையும் நூறு தடாவில் அக்காரவடிசிலும் ஸமர்ப்பித்து, ஸ்ரீ ஆண்டாளால் அருளப்பட்ட திருநாமம்.
9. பாஷ்யகாரர்- சிறந்த ஸ்ரீபாஷ்யம் அருளியதைக் கண்டு காஷ்மீரம்  சாரதாபீடத்திலுள்ள சரஸ்வதி தேவியால் உகந்து சூட்டப்பட்ட திருநாமம்.
10. பூதபுரீச்வரர்- ஸ்ரீ ஆதிகேசவப் பெருமானால் சாற்றியது. (ஸ்ரீபெரும்புதூர்)
11. தேசிகேந்தரர்- திருவேங்கடமுடையானால் சாற்றியது.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்