சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; பிரசாந்தி நிலையத்தில் வேத பாரயணத்துடன் துவக்கம் | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; பிரசாந்தி நிலையத்தில் வேத பாரயணத்துடன் துவக்கம்


புட்டபர்த்தி; ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரசாந்தி நிலையம், சாய் குல்வந்த் ஹாலில் நாளில் 13ம் தேதி வரும் 17 ம்தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், வழிபாடுகள் நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி நிரல் அட்டவணை


நவம்பர் 13, 2025


மாலை 4:30 மணி - வேதம்


மாலை 5:00 மணி - அனிர்பன் ராய் புல்லாங்குழல் இசைக்கச்சேரி


மாலை 6:00 மணி - ஸ்ரீ சத்ய சாய் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலாச்சார விளக்கக்காட்சி. 


மாலை 6:45 மணி - பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி


நவம்பர் 14, 2025


மாலை 4:30 மணி - வேதம்


மாலை 5:00 மணி - திருமதி ரூபா பனேசர் சிதார் இசைக்கச்சேரி


மாலை 6:00 மணி - பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி


நவம்பர் 15, 2025


மாலை 4:30 மணி - வேதம்


மாலை 5:00 மணி - திருமதி டானா கில்லெஸ்பி வெஸ்டர்ன் வோகல்ஸின் இசை நிகழ்ச்சி


மாலை 6:00 மணி - பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி


நவம்பர் 16, 2025


மாலை 4:30 மணி - வேதம்


மாலை 5:00 மணி - உஸ்தாத் அம்ஜத் அலி கானின் இசை கச்சேரி அமான் அலி பங்காஷ் & அயான் அலி பங்காஷ் - சரோத் இன்ஸ்ட்ரூமென்டல்


மாலை 6:00 மணி - பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி


நவம்பர் 17, 2025


மாலை 4:30 மணி - வேதம்


மாலை 5:00 மணி - பண்டிட் விஸ்வ மோகன் பட் & சலில் பட் மோகன் வீணை வாத்தியக் கச்சேரி


மாலை 6:00 மணி - பஜனைகள் தொடர்ந்து மங்கள ஆரத்தி


நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/@PrasanthiMandirLiveRadioSai நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.