ஒரு மாதத்தில் ஒரு கோடி பார்வைகள்: இன்ஸ்டா பக்கம் சாதனை | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

ஒரு மாதத்தில் ஒரு கோடி பார்வைகள்: இன்ஸ்டா பக்கம் சாதனை


புட்டபர்த்தி: பகவான் சத்யசாய் போதனைகளை பரப்பும்  ஸ்ரீசத்யசாய் மீடியா சென்டரின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தை ஒரு மாதத்தில் 1 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

பகவான் சத்யசாய்பாபாவின் போதனைகளையும், அவரின் பெருமைகளையும் விளக்குவதற்காக ஸ்ரீசத்யசாய் மீடியா சென்டர் சார்பில் இன்ஸ்டாகிராம்  சமூக வலைதளத்தில் Srisathyasaiofficial  பெயரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது.  இந்த பக்கத்தில் சாய்பாபாவின் சொற்பொழிவுகள், அவரின் போதனைகள்,  பிரசாந்தி நிலையத்தில் நடக்கும் ஆன்மிக நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் செப்.,– அக்., 21 வரையிலான ஒரு மாத காலத்தில் இந்த பக்கத்தை ஒரு கோடி பேர் பார்வையிட்டு உள்ளதாக ஸ்ரீசத்யசாய் மீடியா சென்டர் அறிவித்துள்ளது. பகவானின் செய்திகள், தரிசனம் மற்றும் பிரசாந்தி நிலையத்தின் அழகான காட்சிகளை பகிர்ந்து இந்த தளம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.