SS அவனாசிப் பத்து - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அவனாசிப் பத்து
அவனாசிப் பத்து
அவனாசிப் பத்து

1. வற்றாத பொய்கை, வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா !
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை,
உமையாள் தனக்கு மகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தாரமாக மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

2. ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவிப்
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாக நின்ற குமரா !
மேலான வெற்றிமயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

3. திருவாசல் தோறும் அருள் வேதமோத
சிவனஞ் செழுத்தை மறவேன்
முருகேச ரென்றே, அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா !
குருநாத சுவாமி குறமாது நாதர்,
குமரேச(ர்) என்ற பொருளே !
மறவாமல் வெற்றி மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

4. உதிரந்திரண்டு பனியூர லுண்டு
உருவாசல் தேடி வருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீதி லேறி
வரவேணு மென்ற னருகே !

5. மண்ணாடு மீசன் மகனாரை யுன்றன்
மனை வீடு தந்தே யருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
நன்றாக வந்தே யடியேனை யாண்டு
நல்வீடு தந்த குகனே !
கொண்டாடி வெற்றிமயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

6. நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்த குமரா !
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறு மெடுத்து வருமுன்
மேலும் பிடித்து அடியார் தமக்கு,
வீராதி வீர ருடனே
சாலப் பரிந்து மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

7. தலைகட்ட நூலின் நிழல்போல  நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடவேற் கடம்பா
அடியேனை ஆளு முருகா !
மலையேறி மேயு மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

8. வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவோர்கள் வாசல்
கடனென்று கேட்க விதியோ
வண்டூறு பூவிலிதழ் மேவுவள்ளி
தெய்வானைக் குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

9. விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்த குமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்கு முருகா !
வடமான பழநி வடிவேல் நாதா !
வரவேணு மென்ற னருகே !

10. ஓங்கார சக்தி <உமைபால் குடித்து
உபதேச முரைத்த பரனே !
பூங்கா வனத்திலிதழ் வேவும்வள்ளி
புஜமீ திருந்த குகனே
ஆங்காரசூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா !
பாங்கான வெற்றிமயில் மீதிலேறி
 வரவேணு மென்ற னருகே !

11. ஆறாறுமாறு வயதான போது
அடியேன் நினைத்த படியால்
வேறேது சிந்தை நினையாம லுன்ற
னாசார சங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோடக் கட்ட வருமுன்
மாறாது தோகையில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

12. கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்று மறியேன்
ஐயா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறிவே ஒடுங்க
வையாளியாக  மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !

13. ஏதேது ஜென்ம மெடுத்தேனா முந்தி
இந்தப் பிறப்பி லறியேன்
மாதா பிதா நீ மாயன் தனக்கு
மருகா குறத்தி கணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போக வருமுன்
வாதாடி நின்று  மயில் மீதிலேறி
வரவேணு மென்ற னருகே !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar