|
ஈசாநாம் ஜகதோ(அ)ஸ்ய வேங்கடபதேர் விஷ்ணோ: பராம் ப்ரேயஸீம் தத்வக்ஷஸ் ஸ்தல நித்ய வாஸ ரஸிகாம் தத்க்ஷாந்தி ஸம்வர்த்திநீம் பத்மாலாங்க்ருத பாணிபல்லவ யுகாம் பத்மாஸநஸ்தாம் ச்ரியம் வாத்ஸல்யாதிகுணோஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகந்மாதரம்
எப்பொழுதும் கைகளில் தாமரை மலர்களை ஏந்திக் கொண்டிருப்பதாலும் தாமரை மலரில் இருப்பதாலும் நித்யானந்த மயக்கமாயிருக்கும் திருமகள் நம் தாய்; தலைவி. அவள் திருவேங்கடவனுடைய திருமார்பில் நித்யவாஸம் செய்து கொண்டு அவனுடைய சீற்றத்தைத் தணித்துப் பொறுமையை வளர்க்கிறாள். நம்மிடத்தும் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாள். ஆதலின் தவறிழைத்துவிட்டோமேயென்ற அச்சமின்றி நம் தந்தையை, திருவேங்கடவனை நாம் அடையலாம். அவ்வாறு அடைவதற்குக் காரணமாய்த் திகழும் திருமகளை நான் வணங்குகிறேன். தாயை வணங்கித் தந்தையிடம் செல்வதால் எனக்கொரு பயமுமில்லை.
|
|
|