மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ; விழா கோலம் பூண்டது மதுரை



மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்.,21) காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அம்மன் மதுரையில் ஆட்சிபுரிந்தபோது நடந்த திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில் இன்றிரவு இந்திர விமானத்தில் அம்மனின் திக்கு விஜயம் நடக்கிறது.

இதைதொடர்ந்து நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, பவளக்கனிவாய் பெருமாள் காலை 6:00 மணிக்கு மீனாட்சி கோயிலில் எழுந்தருளுகிறார். முன்னதாக அதிகாலை 4:00 மணிக்கு கோயிலின் மண்டகப்படிகளாகி, சித்திரை வீதிகளில் அம்மனும், சுவாமியும் வலம் வருகின்றனர். கோயிலின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:00 மணிக்கு எழுந்தருளுகின்றனர். காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டண சீட்டு பெற்றவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகேயுள்ள வழியாக வடக்கு கோபுரத்திற்குள் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஏப்.,22ல் தேரோட்டம் நடக்கிறது. அன்று மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,23 அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். இதையொட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்