தியாகேசா.., ஆரூரா.., கோஷத்துடன் தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம்



தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு, கடந்த 6-ந்தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை,மாலை வேளைகளில் சுவாமி விதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(20ம் தேதி) காலை 5:30 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேருக்கு புறப்பட்டு, காலை 6:15 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளினர். பிறகு, தியாகராஜர் – கமலாம்பாள் தேரில் எழுந்தருள, காலை 7:00 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபத் ஜேக்கப், எஸ்.பி., ஆஷிஷ் ராவத், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சூரியனார்கோவில் ஆதீனம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கினர்.  

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்னர் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மன், சண்டிகேசுவரர் சப்பரங்களும் பின் செல்ல தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது. திருத்தேரோட்டம் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தது. நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் கடைசி நாளான 23ம் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்