செம்மேடு மாலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா



கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி செம்மேடு ஒளியநாயகி அம்மன், மாலையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் திருமுறை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி, தீக்பந்தனம், பிரவேசபலி, மிருச்சங்கிரணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கலாகர்சணம், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வாசனம், மண்டபசாந்தி, பிம்பசத்தி, லட்சமி பூஜை, கோ பூஜைகளைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கருட தரிசனத்துடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்