காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் வெள்ளி தேரோட்டம் விமரிசை



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனாகிய கச்சபேஸ்வரர் பெருமாள் கோவிலில் சித்திரை பெருவிழா, கடந்த 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்பிகையுடன் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் வீதியுலா வந்தார். இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 17ம் தேதி காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வந்தார். ஏழாம் நாள் உற்சவமான, கடந்த 22ம் தேதி காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில், 10ம் நாள் பிரபல உற்சவமான நேற்று முன்தினம் இரவு வெள்ளி ரத உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், கயிலாய வாத்தியங்கள் இசைக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மகாஜன சங்கம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்