ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப நாளை மார்கழி 21ம் நாள் வழிபாடு



பெ.நா.பாளையம்: இடிகரை அருகே உள்ள கோவிந்தநாயக்கன்பாளையம் கோதண்டராமஸ்வாமி கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப… என தொடங்கும், திருப்பாவையின் 21ம் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.இடிகரை அருகே கோவிந்தநாயக்கன்பாளையத்தில், கோதண்டராமஸ்வாமி கோவில் உள்ளது. அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி இடிகரையில் உள்ள, வில்லீஸ்வரரை வழிபட்டு, கோவிந்தநாயக்கன்பாளையத்தில் அவருடைய பாதங்கள் பட்ட பகுதி என்பதை உணர்ந்த முன்னோர், 1764ம் ஆண்டில் இங்கு சீதை, ராமர் லட்சுமண, ஆஞ்சநேயர் கோவிலை கட்டினர்.200 ஆண்டுகளாக பல்வேறு பூஜைகள், இக்கோவிலில் நடந்து வந்தன. 1938 முதல் 1969 வரை, இக்கோவில் சிதிலமடைந்து இருந்தது. ஊர்மக்கள் அளித்த நன்கொடைகள் வாயிலாக புதுப்பிக்கப்பட்டது. தற்போது, இக்கோவிலில் ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத பூஜைகள், புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள் நடந்து வருகின்றன.இங்குள்ள கோதண்டராமரை வழிபட்டால், குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கடுமையான உபாதைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

இக்கோவிலில் நாளை காலை 5:00 மணிக்கு, ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே... என்ற திருப்பாவையின், 21ம் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள், நிரம்பி வழியும் வகையில் பாலை சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட, பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! நீ எழுவாயாக! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் வலிமை இழந்து, உன் பாதத்தில் காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக என்பதே இப்பாடலின் பொருள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்