கல்யாண வெங்கட்டரமண பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

ஜனவரி 10,2018பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள, கல்யாண வெங்கட்டரமண பெருமாள் கோவிலில், நாளை காலை மார்ழி, 27ம் நாள் வழிபாடு நடக்கிறது. இக்கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுயம்புவாக இருந்த இக்கோவில், பாழடைந்து கிடந்தது. 2015ம் ஆண்டில், பெருமாள்பக்தர் கள் இணைந் து, புதிய கோவிலை நிர்மாணித்தனர். இங்கு ஆழ்வார்கள், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு புரட்டாசி சனிக்கிழமை, மார்கழி மாதம், 30 நாட்களும், ராமநவமி, வைகுண்ட ஏகாதசி ஆகியன, சிறப்பாக கொண்டாடப்படும்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்ன வேண்டிக்கொண்டாலும், அது நிறை வேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இக் கோவிலில் நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, திருப்பாவையின், 27ம் நாள் பாடலான ‘கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா…’ என்ற பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.‘எதிரிகளை வெற்றி கொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்வுக்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால்தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடாகம், தோளில் அணியும் பாஹூவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்கு கொடு; புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகை யில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய்வழிய பால் சோறு உண்போம்’ என்பதே, இப்பாடலின் பொருள்.

ஆடுவோமே...வாரணமாயிரம் பாடுவோமே...

மேலும்

திருப்பாவை பாடல் 29-30

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 9-10

மேலும்