வரதராஜப்பெருமாள் கோவில் மார்கழி 29ம் நாள் வழிபாடு

ஜனவரி 12,2018அன்னுார்: அன்னுார் அருகே வரதையம்பாளையத்தில், பழமையான வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், நாளை காலை, 5:30 மணிக்கு ‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து’ எனத்துவங்கும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை சேவிக்கின்றனர்.

கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கணேசபுரத்தில் இருந்து மேற்கே, 3 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த கோவில். இங்கு புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் வழிபாடு நடக்கிறது. இங்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காட்சியளிக்கிறார். குன்னத்துார், அன்னுார், புளியம்பட்டி, காரமடை, ஊட்டி உள்ளிட்ட பல ஊர் மக்களுக்கு, இக்கோவில் குலதெய்வமாக உள்ளது.

இங்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு, திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது.  பூ அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருஅமுது வழங்கப்பட்டது. நாளை அதிகாலை 5:30 மணிக்கு, ‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து’ எனத் துவங்கும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை சேவிக்கின்றனர். ‘மிக அதிகாலையில் வந்து, உன்னை சேவித்து தாமரை போன்ற உன் திருவடிகளை துதிக்கும் காரணத்தை கேட்டுக்கொள். பசுக்களை மேய்த்து ஜீவனம் செய்யும், ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்லக் கூடாது. நாங்கள் விரும்பியவற்றை பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் வரவில்லை. ஏழு ஜென்மத்துக்கும் உன்னுடன், சேர்ந்தவர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம். எங்கள் மற்ற ஆசைகளை அகற்றி, அருள வேண்டும். உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு, மற்ற பொருட்கள் மீது இச்சை ஏற்படாமல் காப்பாயாக’ என்பதே, இப்பாடலின் பொருளாகும்.

ஆடுவோமே...வாரணமாயிரம் பாடுவோமே...

மேலும்

திருப்பாவை பாடல் 29-30

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 9-10

மேலும்