ஜனவரி 09,2023
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் ராபத்து நிகழ்ச்சியின் எட்டாவது நாள் மாலை, தங்க குதிரை வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளி வையாழி கண்டறுதல் வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.