திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள தங்கம் 11329 கிலோ; வட்டி வருமானம் ஆண்டுக்கு 1200 கோடி!



திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி வருகின்றனர். திருமலை திருப்பதியில் நேற்று மட்டும்  55,537 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரு நாள் வசூல் ரூ3.02 கோடி என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் 1161 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது.  இந்த வருடத்தில் மட்டும் 1031 கிலோ தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. 18 ஆயிரம் கோடி நிலையான வைப்புத்தொகை, தங்கம் வைப்பு 11329 கிலோவை எட்டியது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு வட்டி வருமானம் மட்டும் ஆண்டுக்கு 1200 கோடி ஆகும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்