திருமலை ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க முன்பதிவு தேதி அறிவிப்பு



திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாதம் பெருமாளை பக்தர்கள் தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


திருமலை, திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான சேவைகள் நடக்கின்றன. அவற்றில், டிசம்பர் மாத சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கு, எலக்ட்ரானிக் டிப் வாயிலாக முன்பதிவு நேற்று துவங்கியது; வரும், 20ம் தேதி காலை, 10:00 மணி வரை நடக்கிறது. ஆர்ஜித சேவைகளான கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, 21ம் தேதி காலை 10:00 மணிக்கும்; வீட்டில் இருந்தபடியே, ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கும் சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை. ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு, 21ம் தேதி மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. அங்கப்பிரதக்ஷன டோக்கன் முன்பதிவு, வரும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன முன்பதிவு, 23ம் தேதி மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.


சிறப்பு தரிசன டிக்கெட், 300 ரூபாய்க்கான முன்பதிவு, 24ம் தேதி காலை 10:00 மணிக்கும்; திருமலை, திருப்பதி தங்கும் விடுதி முன் பதிவு, 24ம் தேதி மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. இவை அனைத்தும், டி.டி.டி., இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். திருமலை, திருப்பதி உள்ளூர் வாசிகளுக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, வரும் சனிக்கிழமைக்கான அங்கப்பிரதக்ஷன சேவை டிக்கெட்டுக்கான, எலக்ட்ரானிக் டிப் பதிவுக்கான சேவை, இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை திறக்கப்படுகிறது.


புரட்டாசியில் பெருமாளை தரிசிப்பது எப்படி?; புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பதால், அந்த மாதம் முழுதும், திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். பிரம்மோற்சவம் 4ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இரண்டு மாதங்களுக்கு முன், முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும், புரட்டாசி மாதம் தரிசனம் செய்ய விரும்புவோருக்கு, ஸ்டால் தர்ஷன் உள்ளது. இது இலவச தரிசனம் தான். திருப்பதி ரயில் நிலையம் எதிரில் விஷ்ணுநிவாஸ், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினசரி அதிகாலை, 2:00 மணி முதல் தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன் வாயிலாக அன்றோ அல்லது அடுத்த நாளோ குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரிமெட்டு வழியாக படியேறி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு, காலை 6:00 மணிக்கு தினசரி, 3,000 டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல, அலிபிரியில் இருந்து காளிகோபுரம் வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு, தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்படுகின்றன. இந்த தினசரி இலவச தரிசன முன்பதிவு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காலநேரம் மாறுபட வாய்ப்புள்ளது.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்