வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு குறித்து ஆய்வு



வில்லியனுார்; புதுச்சேரி இந்திராகாந்தி தேசிய கலை மைய மாணவர்கள் திருக்காமீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மத்திய அரசு நிறுவனமான இந்திராகாந்தி தேசிய கலை மையம் புதுச்சேரி மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஓவியம், இசை மற்றும் சிற்ப கலைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மையத்தின் இயக்குனர் கோபால் தலைமையில் திருக்காமீஸ்வரர் கோவில் கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்தனர். வில்லியனுாரை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கலைமாமணி வெங்கடேசன், திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள 42 முக்கிய கல்வெட்டுகள் மற்றும் பல்வேறு சிற்பங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார். கோவில் தல வரலாறு, வில்வபுராணம் குறித்தும் தெரிவித்தார்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்