கோவை; பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் பச்சை நிற வஸ்திரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.