சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்



மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.


சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 2வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் பால்,பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் 108 சங்குகளை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில் அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் இளையான்குடி பரமக்குடி சாலை கிராமம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்