ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளது மாறந்தை. இங்கு அருள்பாலிக்கும் ஆதி லட்சுமி வராகப்பெருமாளை தரிசித்தால் திருமணம் நடக்கும். கருவறையில் வராக மூர்த்தி சங்கு, சக்கரம் ஏந்தி மடியில் தாயாரை வைத்தபடி காட்சி தருகிறார். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு மாலைகளை வாங்கி பெருமாள், தாயாரிடம் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். பின் அதில் ஒன்றை பிரசாதமாக வாங்கிச் செல்கிறார்கள். ஐந்து சனிக்கிழமைகள் தொடர்ந்து தரிசித்தால் வேண்டியது கிடைக்கும். நாகதோஷத்திற்கும் இது பரிகாரத்தலமாக உள்ளது. சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், அனுமனுக்கு சன்னதி உள்ளன. மூல நட்சத்திரத்தன்று அனுமனுக்கு வடைமாலை சாத்துகின்றனர்.
கடலாடியில் இருந்து 8 கி.மீ.,
நேரம்: காலை 5:00 – 9:00 மணி, மாலை 5:00 – 9 :00 மணி
தொடர்புக்கு: 76393 24357, 90475 50009
அருகிலுள்ள தலம்: மாரியூர் பூவேந்திர நாதர் 25 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 – 12:00 மணி, மாலை: 4:00 – 8:00 மணி.