மார்கழி ஸ்பெஷல் 9; எமபயம் போக்கும் தலைமலை பெருமாள்!



நாமக்கல் மாவட்டம் தலைமலையின் மீதுள்ள சஞ்சீவிராயப் பெருமாளை தரிசித்தால் எமபயம் நீங்கும். ராம, ராவண யுத்தத்தின்போது ஒருகட்டத்தில் ராமர், லட்சுமணர், வானர வீரர்கள் மயக்கம் அடைந்தனர். இவர்களை காப்பாற்ற சஞ்சீவி மலையக் கொண்டு வந்தார் அனுமன். வரும் வழியில் அந்த மலையின் தலைப்பகுதி இப்பகுதியில் விழுந்தது. இதனால் இத்தலம் தலைமலை என அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடலில் பெருமாள் பள்ளிகொண்டிருப்பது போலவே இந்த மலை உள்ளதால், மலையையும் பெருமாளாக கருதி வழிபடுகின்றனர். மலையின் நான்கு பகுதிகளில் இருந்தும் கோயிலை அடையலாம். வழியில் அலர்மேல் மங்கை தாயாருடன், வெங்கடாஜலபதி, வனபத்ரகாளி, கருப்பண்ண சுவாமி, ஆஞ்சநேயர், விநாயகரையும் பார்க்கலாம். பிறகு சஞ்சீவிராயப் பெருமாளை தரிசிக்கலாம். எமதர்மராஜர் தன் தோஷம் தீர இவரை வழிபட்டுள்ளார். எனவே இங்கு வழிபட்டால் எமபயம் தீரும். 


நாமக்கல்லில் இருந்து 23 கி.மீ.,   


நேரம்; காலை: 6:00 – 2:00 மணி


தொடர்புக்கு; 97876 70021, 95006 83757


அருகிலுள்ள தலம்; நாமக்கல் ஆஞ்சநேயர் 25 கி.மீ., 


நேரம்:காலை:7:00 – 1:00 மணி மாலை:4:30 – 7:30 மணி 


தொடர்புக்கு; 94438 26099.


மார்கழி ஸ்பெஷல் 12; நிம்மதி தருவார் கோதை கிராம பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருவெம்பாவை பாடல் 12

மேலும்