மார்கழி ஸ்பெஷல் 20; வரம் தருவார் நெற்குன்றம் கரிவரதராஜர்



சென்னை, நெற்குன்றத்தில் அருள்பாலிக்கும் கரிவரதராஜப் பெருமாளை வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும். ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் பெருமாளின் அழகை பார்ப்பதற்கு நமது இரு கண்கள் போதாது. அதிலும் தீப ஒளியில் தரிசிக்கும் போது, அவரது இரு கண்களும் நம்மைப் பார்ப்பது போன்று இருக்கும். இங்கு வருவோரின் பாவங்களை தீர்த்து வரம் கொடுக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் பெருந்தேவி தாயார். திருவோணம், ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால் விரும்பியது கிடைக்கும். இங்குள்ள சந்தான கோபாலகிருஷ்ணரின் விக்ரகத்தை குழந்தை இல்லாதவர்கள் தன் மடியில் ஏந்தி சீராட்டுகிறார்கள். அப்படி செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அனுமன், ராமானுஜர், ஆழ்வார்களுக்கு சன்னிதி உள்ளன.  


கோயம்பேட்டில் இருந்து 2 கி.மீ., 


நேரம்: காலை 8:30 – 12:30 மணி மாலை 5:30 –  8:30 மணி


தொடர்புக்கு: 99628 11792, 99625 59123


அருகிலுள்ள தலம்: கோயம்பேடு குறுங்காலீஸ்வரர்


நேரம்: அதிகாலை 5:30 – 12:00 மணி மாலை 4:30 – 8:30 மணி.


மார்கழி ஸ்பெஷல் 22; சர்ப்பதோஷம் தீர... மலைமண்டலப் பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 23

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 3

மேலும்