மார்கழி ஸ்பெஷல் 24; திருமணம் நடக்க... திருவதிகை சரநாராயணர்



கடலுார் மாவட்டம் திருவதிகையில் காட்சி தரும் சர நாராயணப் பெருமாளை வழிபட்டால் திருமணம் நடக்கும். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானுக்கு வில்லைக் கொடுத்தவர் இக்கோயில் பெருமாள். இவருக்கு பிரசன்ன நரசிம்மர் என்ற ஒரு பெயரும் உண்டு. சளக்கிராமக்கல்லினால் உருவாக்கப்பட்ட இவர் ஹேமாம்புஜ வல்லித்தாயாருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். புரட்டாசி மாதம் முழுவதும் இங்கு சன்னதியில் மின்விளக்குகள் இன்றி நெய் தீபங்கள் ஏற்றி ஒளிரச் செய்கின்றனர். இங்கு கருடாழ்வார் கைக்கட்டி சேவகம் செய்வது போல் காட்சி தருகிறார். நரசிம்மர் சயனக்கோலத்தில் தாயாருடன் அருள் செய்கிறார். இவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் இங்கு வழிபட்டுள்ளார். 


பண்ரூட்டியில் இருந்து 3 கி.மீ., 


நேரம்: காலை 8:00 – 11:30 மணி. மாலை 5:00 – 8:15 மணி  


தொடர்புக்கு: 99940 27570, 94437 87186


அருகிலுள்ள தலம்: திருவதிகை வீரட்டேஸ்வரர் 1 கி.மீ.,


நேரம்: காலை 6:00 – 12:00 மணி,மாலை 4:00 –   9:00 மணி 


தொடர்புக்கு: 0944 3988779.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்