மார்கழி ஸ்பெஷல் 23; நினைத்தது நிறைவேற... செங்கோட்டை காட்டழகர்



தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அருள்பாலிக்கும் அழகிய மணவாள பெருமாளை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். இவரை காட்டழகர் என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவியுடன் சங்கு சக்கரம் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் பெருமாள். தொடர்ந்து மூன்று திருவோண நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியதும் பால்பாயசம் நைவேத்யம் செய்யலாம். ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி, புரட்டாசி முதல் நாள் கல்யாண உற்ஸவம், புரட்டாசி சனிக்கிழமை, தைப்பொங்கலன்று ஊஞ்சல் சேவையும் நடக்கும். திருவிதாங்கூர் ராஜா சுந்தரவர்மனும், பாண்டிய மன்னர்களும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.  இங்கு கருடாழ்வார், விஷ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நம்மாழ்வாருக்கு சன்னதிகள் உள்ளன. 


தென்காசியில் இருந்து 8 கி.மீ., 


நேரம்: காலை 6:00 – 8:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி 


தொடர்புக்கு: 98421 79394, 99946 64830


அருகிலுள்ள தலம்: புளியரை தட்சிணாமூர்த்தி 10 கி.மீ., 


நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 5:00 –  8:00 மணி.


மார்கழி ஸ்பெஷல் 24; திருமணம் நடக்க... திருவதிகை சரநாராயணர்

மேலும்

திருப்பாவை பாடல் 25

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

மேலும்