மார்கழி ஸ்பெஷல் 21; அழகாக மாறணுமா... வகுளகிரி வெங்கடாஜலபதி



துாத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வகுளகிரி மலையில் உள்ள வெங்கடாஜலபதியை வணங்கினால் அழககாக மாறலாம்.  முன்பு வடஇந்தியாவில் சுபகண்டன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு கண்டமாலை என்ற நோய் வந்ததால், கழுத்தில் கட்டி ஏற்பட்டது. அவதிப்பட்ட அவர் திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட்டார். அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘சுபகண்டா. சந்தனக் கட்டை கொண்டு எனக்கு ஒரு தேர் செய். அதில் மீதம் இருக்கும் கட்டையை தாமிரபரணி கரையில் உள்ள வகுளகிரியில் பிரதிஷ்டை செய். நோய் தீரும்’ என்றார். அதன்படி இங்கு வந்து பிரதிஷ்டை செய்து நோய் நீங்கப்பெற்றார் மன்னர். அதிலும் முன்பு இருந்ததை விட அழகாக மாறி நாடு திரும்பினார். இதன் மூலம் இங்கு நோய் தீர்க்கும் வைத்தியராக காட்சி தருகிறார் வெங்கடாஜலபதி பெருமாள். ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் உற்ஸவர் சீனிவாசர். மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதுபோல், இங்கு சீனிவாசர் தாமிரபரணியில் இறங்கி அருள் செய்கிறார். 


திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ., 


நேரம்: காலை 8:00 – 10:30 மணி, மாலை 5:00 – 8:00 மணி


தொடர்புக்கு: 99420 51512


அருகிலுள்ள தலம்: ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான் கோயில் 10 கி.மீ., 


நேரம் : காலை 7:00 – 12:00 மணி மாலை 5:00 –   8:30 மணி.


மார்கழி ஸ்பெஷல் 23; நினைத்தது நிறைவேற... செங்கோட்டை காட்டழகர்

மேலும்

திருப்பாவை பாடல் 24

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 4

மேலும்