சிவகாசி; சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கும் இரவு 8:00 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். 9 ம் திருவிழாவான ஜன. 29 ல் சுவாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி ரத உற்சவம் நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டம் நடைபெறும்.