பஞ்சாமிதர்ம் தயாரிக்க வாழைப்பழங்கள் கொள்முதலால் விலை இருமடங்கு உயர்வு



ராமநாதபுரம்; தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி, திருச்செந்துார் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பஞ்சாமிதர் தயாரிக்க  மொத்தமாக கொள்முதல் செய்வதால் வாழைப்பழத்தின் விலை கடந்த மாதத்தைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்கள் சாகுபடி குறைந்த அளவே நடக்கிறது. பெரும்பாலான பழங்களை மதுரை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் வாங்கி வந்து வியாபாரிகள் ராமநாதபுரத்தில் விற்கின்றனர்.  தற்சமயம் வாழைப்பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் கடந்த மாதம் 14 பழங்கள் அடங்கிய  சீப் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்றது. தற்போது ரூ.40 முதல் 60 வரை  இருமடங்கு விலை உயர்ந்துள்ளது. சாயல்குடி வியாபாரி முனியசாமி கூறுகையில், துாத்துக்குடி மாவட்டம் ஆத்துாரில் இருந்து தார் கணக்கில் வாழைப்பழம் வாங்குகிறோம். தற்போது பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிறுவனங்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்குகின்றனர். இதனால் விலை அதிகரித்துள்ளது. 150 தார் வரை வாங்க நினைத்தும் வெறும் 80 தார் தான் கிடைத்தது.  ஒரு சீப்  பூவன் ரூ.40க்கும், நாட்டுபழம், ரஸ்தாளி ரூ.50க்கும் விற்கிறோம். தைப்பூச விழா முடியும் வரை வாழைப்பழம் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்