வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 6:30 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.