செஞ்சி; செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு காலையில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலகாரமும் செய்தனர். மாலை 3 மணிக்கு அருட்பெரும்ஜோதி சுவாமிகள் மார்பு மீது மாவு இடித்தும், மிளகாய் சாந்து அபிஷேகமும் செய்தனர். மாலை 5 மணிக்கு பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், செடல் சுற்றியும், தீமிதித்தும், காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் அலகு குத்தி கார், டிராக்டர் மினி லாரி, மற்றும் தேர் இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.