வால்பாறை கோவில்களில் மாசி மாத பூஜை; ஐயப்ப சுவாமிக்கு ஆராதனை



வால்பாறை; மாசி மாத முதல் நாளான இன்று ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலில் மாசி மாதம் முதல் நாளான இன்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், தொடர்ந்து அபிஷேகம் பூஜை நடந்தது. அதன்பின் சிறப்பு  அலங்காரத்தில்  ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் இன்று காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5:30 மணிக்கு அபிஷேக பூஜை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கருமலை பாலாஜி கோவிலில், காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை, 5:30 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி அருள்பாலித்தார். வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. அண்ணா நகர் ராமர் கோவிலில், காலை, 7:00 மணிக்கு மாசி மாத சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்