சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோவில் ரோப்கார் சேவை பனிமூட்டத்தால் பாதிப்பு



சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு 1,305 படிக்கள் கொண்ட யோகநரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு கடந்த ஆண்டு மார்ச்சில், ரோப்கார் சேவை துவங்கப்பட்டது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சோளிங்கர் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது. யோகநரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரியமலை, பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தது. இதனால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு மேல் பனிமூட்டம் விலகியதும் ரோப்கார் சேவை துவங்கியது. 


தொட்டாச்சாரியார் உற்சவம்: யோகநரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரில் அருள்பாலிக்கிறார். பக்தோசித பெருமாள் கோவிலில் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை தொட்டாச்சாரியார் உற்சவம் நடக்கிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்