திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேல்தனியாலம்பட்டு அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேல்தனியாலம்பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 17ம் தேதி மாலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு கரகத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து நேற்று பகல் 1:00 மணி அளவில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து 23ம் மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.