மயிலாடுதுறை ; சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் காளஹஸ்திக்கு ஞானரத யாத்திரையாக புறப்பட்டார்.
மகா சிவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. காளகஸ்தியில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனதிருமடத்திலிருந்து, 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்கிறார். இதற்காக அவர் தருமபுரம் ஆதீன திருமடத்தில் இருந்து இன்று, பூஜை மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் ஸ்ரீசொக்கநாத பெருமானுடன் ஞானரத யாத்திரை புறப்பட்டார். வழியெங்கும் பக்தர்கள் மற்றும் ஆதீனக்கல்வி நிலையங்கள் சார்பில் ஞானரத யாத்திரை சென்ற தருமபுரம் ஆதீனகர்த்தருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.