சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் உள்ள புத்தர் கோயிலில் 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு விழா நடந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரிருப்பு கிராமத்தில் புத்தர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2000ம் ஆண்டு 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரம் கட்டும் பணி துவங்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச்4ம் தேதி உலக அமைதி கோபுரத்தின் உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 2023ம் ஆண்டு மார்ச்26ம் தேதி அமைதி கோபுரத்தில் புத்தர்சிலைகள்வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஜப்பான் நாட்டைசேர்ந்த நிப்போன்ஷன் மியோஹோஜி தலைமை புத்ததுறவி கியொகோஇமாய் உலக அமைதி கோபுரத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சர்வசமய வழிபாடு நடந்தது. விழாவில் மங்கோலிய நாட்டு துாதர்கென்போல்டு டம்பாஜிவ், முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல், தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன், தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், எம்.எல்.ஏ.,க்கள்ராஜா, சதன்திருமலைகுமார், சிவகிரி தாசில்தார் மைதீன் பட்டாணி, அரசு வக்கீல் மருதப்பன், கண்ணன், கோமதி அம்பாள்மெட்ரிக்பள்ளி முதல்வர் பழனிசெல்வம், சங்கரன் கோவில் ரோட்டரி சங்கமுன்னாள் தலைவர்கள் சங்கரசுப்பிரமணியன், மாரியப்பன், வேல்ஸ் கல்வி குழும தாளாளர்சண்முகசாமி, ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து, நேபாளம் உட்படபல்வேறு நாடுகளைச்சேர்ந்த புத்ததுறவிகள், பொதுமக்கள் உட்படபலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் புத்தர்கோயில் புத்ததுறவிகள் இசிதான்ஜி, லீலாவதி, சிகுசா கிமுரா செய்திருந்தனர்.