மாசி சனி; கோவை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு



கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதரராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


* மாசி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அனுமன். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்