மயிலம் முருகர் கோவில் பங்குனி உத்திர விழா துவங்கியது



மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, இன்று 2ம் தேதி அதிகாலை 6:00 முதல் 7:15 வரையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், மயிலம் ஆதீனம் 7:00 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.  காலை 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடந்தது.  நாளை 3ம் தேதி காலை 11:00 சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு ஆட்டுக்கிட வாகனத்தில் கிரிவலம் காட்சி நடக்கிறது. வரும் 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்க மயில் வாகனத்திலும், 9ம் தேதி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடக்கிறது. வரும் ஏப்ரல் 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 11ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவம், தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 12ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி கிரிவல காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலாலய சுவாமிகள் செய்து வருகிறார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்