கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது



அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாவட்டம், திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 11 ம் தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்றனர். அங்கு கிராம சாந்தி நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து, கணபதி ஹேமம் வளர்க்கப்பட்டு, கொண்டத்து காளியம்மனுக்கு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார் . நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் பொது மக்கள், கோவில் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வரும் 8 ம் தேதி குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்