சிறுவாபுரி கோவிலுக்கு மாற்று பாதை; அமைச்சர் சேகர்பாபு தகவல்



சென்னை; ‘‘சிறுவாபுரி கோவில் மற்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் மக்களுக்கு, நிச்சயம் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும்,’’ என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


தி.மு.க., – கோவிந்தராஜன்: திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க, அறநிலையத்துறை சார்பில், 45 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு நன்றி.


அதேபோல், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு, போக்குவரத்து அதிகமாக உள்ளது. பெரியபாளையத்திற்கு அறநிலையத்துறை சார்பாக, புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.


அமைச்சர் சேகர்பாபு: பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு திருப்பணி நடந்து வருகிறது. அப்பணி நிறைவடையும்போது, தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


சிறுவாபுரி கோவிலை பொறுத்தவரை, வாரம்தோறும் செவ்வாய்கிழமை, 40,000த்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுகின்றனர். அக்கோவிலுக்கு, 45 கோடி ரூபாயில் மாற்றுப் பாதைக்கு திட்டமிடப்பட்டு, அதற்கு அரசு நிதி கோரப்பட்டுள்ளது. இந்த மானிய கோரிக்கையின்போது, முதல்வர் அனுமதி பெற்று, இரண்டு கோவில்களுக்கும் வரும் பக்தர்களுக்கு, போக்குவரத்து வசதி நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்