ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்



மீஞ்சூர்; காஞ்சிபுரத்தில் போன்று மீஞ்சூரிலும் வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில்கள் உள்ளன. இதனால், மீஞ்சூரை வடகாஞ்சி என அழைக்கின்றனர். இன்று காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 5:30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஏகாம்பரநாதரை வழிபட்டனர். வரும் 8ம் தேதி தேர்த்திருவிழாவும், 11ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. 15ம் தேதி வரை தொடர்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி என, பல்வேறு உற்சவங்கள் நடக்கின்றன. தினமும் ஏகாம்பரநாதர் வீதியுலாவும் நடைபெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்