காணை அழகுநாச்சியம்மன் கோவில்மகா கும்பாபிஷேகம்



விழுப்புரம்;  காணை அழகுநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. விழுப்புரம் அருகே காணையில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில், அழகுநாச்சியம்மன், விநாயகர், பாலசுப்ரமணியர், துர்கா பரமேஸ்வரி அம்மன் சன்னதிகள் புதுப்பித்து திருப்பணிகள் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி காலை 7.00 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. அன்று மாலை கோ பூஜை, ஹோமங்கள், தீபாராதனை, முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. 3ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், ஹோமங்களும், மாலை 4.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. இன்று காலை 8.00 மணிக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டு, விநாயகர், பாலசுப்ரமணியர், துர்கா பரமேஸ்வரி, அழகுநாச்சியம்மன் கோவில் கோபுர கலசங்களின் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காணை, விழுப்புரம் சுற்று வட்டார பொது மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்