பங்குனி உத்திர விழா : முருகன் கோயில்களில் கோலாகலம்



கீழக்கரை; கீழக்கரை அருகே நத்தம் குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் சேதுபதி மன்னர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்தர விழா நடந்தது. கடந்த ஏப்., 1 காப்பு கட்டுதல் மற்றும் புதியதாக ஸ்தாபனம் செய்யப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.,10 ல் 108 விளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், 9:00 மணிக்கு வன்னி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா நடந்தது. மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை ரமேஷ் குருக்கள் செய்திருந்தார். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் வசவலிங்கம் மற்றும் வைகை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


* கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட தட்டார் மடத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் 93 வது ஆண்டு பங்குனி உத்தர விழா நடந்தது. கடந்த ஏப்., 3 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்கு பால்குடம், வேல் காவடி, சிலம்பு காவடி உள்ளிட்டவைகளுடன் கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தட்டார் மடம் வந்தடைந்தது. சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கரை தட்டார் தெரு விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்