காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை



காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவத்தை அடுத்து வரும் நாளில், வேகவதி தெருவில் அமைந்துள்ள தோட்டத்தில், பெருமாள், உபய நாச்சியாருடன் எழுந்தருளி தோட்ட உத்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 5:30 மணிக்கு வரதராஜ பெருமாள், உபய நாச்சியாருடன், வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில் தங்க பல்லக்கில், சேனை முதன்மையாருடன் சன்னிதி தெரு, நான்கு மாட வீதிகள் வழியாக வேகவதி தெருவில் அமைந்துள்ள தோட்டத்திற்கு சென்றடைந்தார். அங்கு காலை 11:00 மணியளவில் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜை நடந்தது. தொடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணியளவில், வரதராஜ பெருமாள், உபயநாச்சியார் பன்னீர் ரோஜா மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தி உலாத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்